அறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு

180

அறிவிப்பு:- *மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை)* | நாம் தமிழர் கட்சி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக்கோரி நூறு நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடிய அப்பாவி பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய அரசப் பயங்கரவாதம் நடைபெற்று ஓராண்டு முடிவடைந்தபோதும் படுகொலையுண்டவர்களுக்கு நீதி கிடைக்காத சோகம் தொடர்கிறது.

மே-22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் *சீமான்* அவர்களின் தலைமையில் *22-05-2019 புதன்கிழமை காலை 10 மணியளவில்* சென்னையில் உள்ள *தலைமையகத்தில்* சுடர் வணக்கம் மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

அவ்வயம் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள், பாசறைப் பொறுப்பாளர்கள், நாம் தமிழர் உறவுகள், பொதுமக்கள் என பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி