அறிவிப்பு: சூன் 01, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – திருநெல்வேலி

77

அறிவிப்பு: சூன் 01, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – திருநெல்வேலி | நாம் தமிழர் கட்சி

மே 18, இனப் படுகொலை நாளின் பத்தாம் ஆண்டு நினைவேந்தும் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 01-06-2019, சனிக்கிழமை அன்று மாலை 04 மணியளவில் பெல் திடல், திருநெல்வேலி, நீதிமன்றம் எதிரில் நடைபெறவிருக்கிறது.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, நகரம், ஒன்றிய, வட்டம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் இளைஞர் பாசறை, மகளிர் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, வழக்கறிஞர் பாசறை, மருத்துவப் பாசறை, உழவர் பாசறை, தொழிற்சங்கம், சுற்றுச்சூழல் பாசறை, ஊழல் கையூட்டு ஒழிப்பு பாசறை, மாணவர் பாசறை, விளையாட்டுப் பாசறை, மீனவர் பாசறை, குருதிக்கொடை பாசறை உள்ளிட்ட அனைத்துப்பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பேரெழுச்சியாகப் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

எழுச்சியுரை: செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்

நிகழ்வு ஏற்பாடு: நாம் தமிழர் கட்சி – மராத்திய மாநிலம் (மும்பை)

நிகழ்வு ஒருங்கிணைப்பு: நாம் தமிழர் கட்சி – திருநெல்வேலி

நாள்: 01-06-2019, சனிக்கிழமை, மாலை 04 மணி
இடம்: பெல் திடல், திருநெல்வேலி, நீதிமன்றம் எதிரில்

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

நாம் தமிழர்!

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
044-43804084