அறிவிப்பு: இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதலாம் நாள் மற்றும் இரண்டாம் நாள்

9

நாள்: 01.05.2019

சுற்றறிக்கை: இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – முதலாம் நாள் மற்றும் இரண்டாம் நாள் | க.எண்: 2019050082 | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. விவசாயி சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 04-05-2019 முதல் 17-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார். முதலாம் நாள் மற்றும் இரண்டாம் நாளுக்கான இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் பின்வருமாறு;

 

எண் நாள் நேரம் தொகுதி பொதுக்கூட்டம் நடைபெறும் இடம்
1 04-05-2019 சனி மாலை 05 மணி திருப்பரங்குன்றம் திருபரங்குன்றம்,
16 கால் மண்டபம் அருகில்
இரவு 08 மணி திருப்பரங்குன்றம் அவனியாபுரம்,
பேருந்து நிலையம் அருகில்
2 05-05-2019 ஞாயிறு மாலை 05 மணி ஒட்டப்பிடாரம் தருவைக்குளம்
மாதாக் கோயில் அருகில்
இரவு 08 மணி ஒட்டப்பிடாரம் தாளமுத்து நகர்,
பேருந்து நிலையம் அருகில்

 

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம்
விவசாயி

 

 

இரா.இராவணன்

தேர்தல் செயலாளர்