பொள்ளாச்சி, கோயம்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை

51

செய்திக் குறிப்பு: பொள்ளாச்சி, கோயம்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை | நாம் தமிழர் கட்சி

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட முடியாத சூழலில், நாம் தமிழர் கட்சி தனது உளமார்ந்த முழு ஆதரவை அத்தொகுதியில் படுக தேச பார்ட்டி சார்பில் “கைத்தடி” சுயேட்சையாகப் போட்டியிடும் மா.சுப்ரமணி என்ற சுயேட்சை வேட்பாளருக்கு வழங்கி இருக்கிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 25-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

ஒன்பதாம் நாளான நேற்று 02-04-2019 செவ்வாய்கிழமை மாலை 05 மணியளவில், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அ.சனுஜா அவர்களை ஆதரித்து பொள்ளாச்சி ஆனமலை சாலை, வள்ளுவர் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

காணொளி: https://www.youtube.com/watch?v=EKWS2mpxu-k

அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், கோயம்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் மற்றும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் படுக தேச பார்ட்டி சார்பில் சுயேட்சையாகப் போட்டியிடும் மா.சுப்ரமணி ஆகியோரை ஆதரித்து கோவை, சோமனூர் பேருந்து நிலையம் அருகில் .தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

காணொளி: https://www.youtube.com/watch?v=uhydOpCOgSU