சுற்றறிக்கை: மாவட்டவாரியாக இடைத்தேர்தல் களப்பணி விவரம்

415

சுற்றறிக்கை: மாவட்டவாரியாக இடைத்தேர்தல் களப்பணி | க.எண்: 2019040078 | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 04 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறது.

நமது கட்சியின் திட்டங்களையும் கொள்கைகளையும் வீதி வீதியாக வீடு வீடாக  மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த இடைத்தேர்தல் களம் மிக முக்கியமானது. மேலும் தமிழக அரசியல் களத்தில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் தேர்தலாக இத்தேர்தல் இருக்கும் என்பதில் ஐயமில்லை. மாற்றத்தை விரும்பும் புதிய தலைமுறையினரிடம் மாற்றத்திற்கான விதைகளை விதைக்க வீரியமிக்க இளையோர் பெரும்படை பரப்புரைக் களத்தில் நேர்த்தியான திட்டமிடலுடன் களமாட வேண்டியது அவசியமாகிறது. எனவே 04 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் களப்பணியாற்ற வேண்டிய உறவுகள் விவரம், மாவட்டவாரியாக கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது;

சூலூர் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளுர் மாவட்ட உறவுகள்.
அரவக்குறிச்சி கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், கடலூர்,  பாண்டிச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட உறவுகள்.
ஒட்டப்பிடாரம் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட உறவுகள்.
திருப்பரங்குன்றம் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை,  நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட உறவுகள்.

உழவை மீட்போம்! உலகை காப்போம்!
நமது சின்னம் “விவசாயி”

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
ksenthil@naamtamilar.org

முந்தைய செய்திசுற்றறிக்கை: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: இன எழுச்சி அரசியல் மாநாடு – 2019