இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும் தமிழகத்தில் சாதி-மத மோதலைக் கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

54

செய்திக்குறிப்பு: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளைக் கண்டித்தும் தமிழகத்தில் சாதி-மத மோதலைக் கண்டித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இலங்கையின் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. இக்கொடுரத் தாக்குதலைக் கண்டித்தும் தமிழகத்தில் அதிகரித்து வரும் சாதி-மத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி மற்றும்தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாக இன்று 26-04-2019 வெள்ளிக்கிழமை, பிற்பகல் 03 மணியளவில் சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காணொளி: https://youtu.be/LlDbkxZnkzI

கண்டன உரையாற்றியவர்கள்:

அ.வினோத், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்

ஆ.கி.சோசப் கென்னடி, தமிழர் தேசிய விடுதலைக் கழகம்

மு.களஞ்சியம், தமிழர் நலப் பேரியக்கம்

செ.முத்துப்பாண்டியன், மருது மக்கள் இயக்கம்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084