நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த் தேசிய மலைநாடு மக்கள் கட்சி

853

செய்திக் குறிப்பு: நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த் தேசிய மலைநாடு மக்கள் கட்சி | நாம் தமிழர் கட்சி

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ‘”விவசாயி” சின்னத்தில் போட்டியிடவிருக்கிறது. 15க்கும் மேற்பட்ட தமிழ்த் தேசிய இயக்கங்கள் கட்சிகள் உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தர்மபுரி, சேலம், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கிளைகளை நிறுவி மக்கள் பணியாற்றி வரும் தமிழ்த் தேசிய மலைநாடு மக்கள் கட்சியும் நாம் தமிழர் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் நிறுவனத் தலைவர்பொ.பா.இராமசாமி மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் அடங்கிய குழுவினர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு நிலைப்பாட்டைத் தெரிவித்து கடிதம் வழங்கினர். தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் களச்செயற்பாடுகள் குறித்தும் பரப்புரைப் பயணத்திட்டம் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடினர்.


தலைமை அலுவலகச் செய்திப்பிரிவு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநமது சின்னம் “விவசாயி” – பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சீமான் அறிமுகம் | சென்னை
அடுத்த செய்திசுற்றறிக்கை: மார்ச்-23, வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் – சென்னை (மயிலாப்பூர்)