சுற்றறிக்கை: தொகுதிவாரியாக கொள்கைப் பரப்பு பேச்சாளர்கள் பட்டியல் கோருதல் தொடர்பாக

474

சுற்றறிக்கை: தொகுதிவாரியாக கொள்கைப் பரப்பு பேச்சாளர்கள் பட்டியல் கோருதல் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கானப் பரப்புரையை மிக சிறப்பாக திட்டமிட்டு செயற்படுத்தும் விதமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் இருந்து கொள்கைப் பரப்பு பேச்சாளர்கள் பட்டியலை அந்தந்த மாவட்ட/தொகுதி பொறுப்பாளர்கள் சேகரித்து தலைமை அலுவலகத்திற்கு நேரிடையாக/அஞ்சல்/மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

விரைவில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில், கொள்கைப் பரப்பு பேச்சாளர்களுக்கானப் பயிலரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக பேச்சாளர்கள் பட்டியலை, தலைமை அலுவலகத்திற்கு விரைந்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அனுப்பவேண்டிய முகவரி:

நாம் தமிழர் கட்சி – தலைமையகம்,
இராவணன் குடில்,
எண் 08, மருத்துவமனைச் சாலை,
செந்தில்நகர், சின்னப் போரூர்,
சென்னை – 600116.
தொலைபேசி: +044-43804084
ravanankudil@gmail.com


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – ஜெர்மனி பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030028
அடுத்த செய்திஈழம் – எங்கள் இனத்தின் தேசம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு