தலைமை அறிவிப்பு: மீண்டும் கட்சியில் இணைப்பு | க.எண்: 2019030027

83

தலைமை அறிவிப்பு: திருச்சி துரைமுருகன் மீண்டும் கட்சியில் இணைப்பு | நாம் தமிழர் கட்சி

கடந்த 02-02-2019 அன்று, கட்சிப் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அ.துரைமுருகன் அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்துள்ளதின் பேரில் மீண்டும் கட்சியில் இணைந்துக்கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் இணைத்துக்கொள்ளப்படுகிறார். அவர் ஏற்கனவே வகித்த மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலேயே தொடர்ந்து களப்பணியாற்றுவார் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் (க.எண்: 2019030027) அறிவித்துள்ளார்.

எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தலைமை அலுவலகச்செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி