அறிக்கை: மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி | நாம் தமிழர் கட்சி
எம்முயிர் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியர் மொழிப்போர் ஈகியரின் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் வருகின்ற 16-02-2019 சனிக்கிழமை மாலை 04 மணியளவில் தூத்துக்குடி, வி.வி.டி.சாலை சமிக்ஞை அருகில் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று வீரவணக்கவுரையாற்றுகிறார்.
அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி