தலைமை அறிவிப்பு: தொகுதிக் கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழு | க.எண்: 2019020007

301

தலைமை அறிவிப்பு: தொகுதிக் கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழு | க.எண்: 2019020007 | நாம் தமிழர் கட்சி

 1. வழக்கறிஞர் நா.சந்திரசேகரன் (00323914396), மாநில ஒருங்கிணைப்பாளர்
 2. கா.கலைக்கோட்டுதயம் (17004455504), மாநில ஒருங்கிணைப்பாளர்
 3. தமிழ் முழக்கம் சாகுல் அமீது (12270174997), மாநில ஒருங்கிணைப்பாளர்
 4. இரா.அன்புத்தென்னரசன் (67257651561), மாநில ஒருங்கிணைப்பாளர்
 5. வழக்கறிஞர் ச.சிவக்குமார் (26532177910), மாநில ஒருங்கிணைப்பாளர்
 6. பொறியாளர் செ.வெற்றிக்குமரன் (20493288898), மாநில ஒருங்கிணைப்பாளர்
 7. அமுதாநம்பி (00325723905), மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
 8. வழக்கறிஞர் இரா.இராவணன் (00873498269), மாநில ஒருங்கிணைப்பாளர்
 9. மருத்துவர் களஞ்சியம் சிவக்குமார் (00459260045), மாநில ஒருங்கிணைப்பாளர்
 10. விருகை த.சா.இராஜேந்திரன் (00324098804), மாநில ஒருங்கிணைப்பாளர்
 11. கல்வியாளர் மு.இ.ஹுமாயூன் கபீர் (13485156986), மாநில ஒருங்கிணைப்பாளர்
 12. சிவகங்கை இராம.கோட்டைக்குமார் (25490095674), மாநில ஒருங்கிணைப்பாளர்
 13. இயக்குநர் ஆ.செகதீசன் (07239129983), மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
 14. பேராசிரியர் ச.கல்யாணசுந்தரம் (11425840011), மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
 15. வழக்கறிஞர் மணி.செந்தில் (13108713793), மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
 16. மருத்துவர் இரா.இரமேஷ்பாபு (00324586753), மாநில மருத்துவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
 17. வழக்கறிஞர் ச.சுரேசுகுமார் (02827084983), மாநில வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
 18. சேலம் ராசா அம்மையப்பன் (07395583968), மாநில ஒருங்கிணைப்பாளர்
 19. கடலூர் வா.கடல்தீபன் (03081650739), மாநில ஒருங்கிணைப்பாளர்

இவர்கள் அனைவரும் தொகுதிக் கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழுப் பொறுப்பாளர்களாக இன்று (01-02-2019) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களைக் கருத்திற்கொண்டு இக்குழு தமிழகமெங்கும் பயணம் மேற்கொண்டு அனைத்து தொகுதிகளிலும் புதிய பொறுப்பாளர்கள், பொறுப்பு மாற்றம், பொறுப்பாளர்கள் மாற்றம் மற்றும் வேட்பாளர்கள் தேர்வு போன்ற கட்டமைப்புப் பணிகளுக்கான பரிந்துரைகளை இறுதி செய்வார்கள். இறுதி செய்யப்பட்ட பரிந்துரைகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் ஏற்கப்பட்டுத் தலைமையகத்திலிருந்து மாவட்டவாரியாக அறிவிப்புகள் வெளியிடப்படும்.

எனவே தொகுதிக் கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வுக் குழுப் பொறுப்பாளர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி