சுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவல் சேகரிப்பு படிவம்

26

சுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவல் சேகரிப்பு படிவம் | நாம் தமிழர் கட்சி

தமிழகத்தில் கடந்த நவம்பர் 16 அன்று கஜா எனும் பெரும்புயலின் கொடுஞ்சீற்றத்தால் தமிழகத்தின் வளமையான காவிரிப்படுகை மாவட்டங்களான  நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், இராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த காற்று, கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகின. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள நாம் தமிழர் கட்சியினரோடு பிற மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினரும் இணைந்து, மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் மிக விரைவாக செயல்பட்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நவம்பர் 20,21,22 ஆகிய நாட்களில் தொடர்ச்சியாக நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் மிகவும் பாதிப்படைந்து தொடர்பற்று கிடக்கும் கிராமங்களில் நாம் தமிழர் கட்சியினர் மூலமாக நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

புயல் கரையைக் கடந்து 20 நாட்களுக்கு மேலாகியும் இயல்புநிலை திரும்பவில்லை. டெல்டா மாவட்டங்களை மறுகட்டமைப்பு செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்நிலையில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளில் இருந்தும் நாம் தமிழர் கட்சியினர் செய்த நிவாரணப் பணிகளை ஆவணப்படுத்தும்பொருட்டு தொகுதிவாரியாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. எனவே தங்கள் தொகுதி/நகரம்/ஒன்றியம் சார்பாக முன்னெடுக்கப்பட்ட நிவாரணப்பணிகள் குறித்தான விவரங்களை கிழேயுள்ள இணைப்பு படிவத்தில் உரிய முறையில் நிரப்பி அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Fill Form Now

படிவம்: http://bit.ly/NTKGaja


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திகஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (07-12-2018)