முக்கிய அறிவிப்பு: கஜா புயலால் பெரும்பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சீமான் தலைமையில் நிவாரணப் பணிகள்

152

முக்கிய அறிவிப்பு: கஜா புயலால் பெரும்பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சீமான் தலைமையில் நிவாரணப் பணிகள் | நாம் தமிழர் கட்சி

கடந்த நவம்பர் 15, அன்று நள்ளிரவில் தொடங்கி மறுநாள் பிற்பகல் வரை தொடர்ந்த கஜா எனும் பெரும்புயல் ஏற்படுத்திய பேரழிவினால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இயல்புநிலை முடங்கிப்போயுள்ளது. புயல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தாண்டி பல உயிரிழப்புகள், நூற்றுக்கணக்கான குடிசைகள், வீடுகள் சேதம், ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறப்பு, பல்லாயிரக்கணக்கான பனை, தென்னை உள்ளிட்ட வேளாண் மரங்கள் சாய்ந்தது, கோடிக்கணக்கான மதிப்புடைய வாழை, நெற்பயிர்கள் பாதிப்பு, பெரும்மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்து சாலைகள் மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்தும் தகவல் தொடர்பும் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. மேலும் கணக்கிடமுடியாத அளவில் பொருளிழப்பு ஏற்பட்டுள்ளது.

புயல் பாதிப்பிலிருந்து நமது உறவுகளை மீட்டெடுக்கும் பெரும்பணியில் நாம் தமிழர் உறவுகள் விரைந்து செயற்பட்டு சாலைகள் சீரமைத்தல், வீழ்ந்த மரங்களை அகற்றுதல், பாதிக்கபபட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், பால், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, உடைகள் உள்ளிட்ட அடிப்படை உதவிகளை வழங்கினர். இப்பணிகள் தொடர்ச்சியாக அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக்கப்பட்டு தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. எனினும் பல்வேறு இடங்களில் உள்ள புயல் பாதுகாப்பு முகாம்களிலும், காயங்கள், நோய்தொற்றுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ முகாம்களிலும் அதிகளவில் குடிநீர் தட்டுப்பாடும் உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வருகின்ற நவம்பர் 20, 21, 22 ஆகிய மூன்று நாள்களிலும் கஜா புயலால் பெரும்பாதிப்புக்குள்ளான பகுதிகள் முழுவதும் நேரில் சென்று நிவாரணப்பணிகளில் ஈடுபடவிருக்கின்றார். எனவே, தமிழகமெங்கும் இருக்கும் நாம் தமிழர் உறவுகள் தத்தம் பகுதிகளில் இருந்து புயல் நிவாரணப் பொருட்களைச் சேகரித்துக்கொண்டு பாதிக்கப்பட்டுள்ள கடலோர மாவட்டங்களுக்கு உடனடியாக விரையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், புயல் நிவாரணப் பொருட்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேருவதை உறுதிசெய்யும் பொருட்டு, ஒவ்வொரு தொகுதி சார்பில் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருட்கள் எந்தெந்தப் பகுதிகளுக்கு செல்லவேண்டும் என்பதைத் திட்டமிட, நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்கூட்டியே தலைமை அலுவலகத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தலைமை நிலையச் செயலாளர்: செந்தில்குமார் +91-9600709263

தலைமை அலுவலகம் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்ப:

எண், 8, மருத்துவமனைச் சாலை, செந்தில்நகர்,
சின்னப்போரூர், சென்னை 600116
தொடர்புக்கு: +91-9500767589

நிவாரணப் பணிகளுக்கான நிதியுதவி அளித்திட:

Account Name: Naam Tamilar Katchi
Bank Name: Axis Bank
Acc. Number: (Current) 916020049623804
IFSC code: UTIB0002909
MICR Code: 600211076
SWIFT Code: CHASUS33
Branch: Maduravoyal, Chennai-600095

BHIM UPI: 9092529250@upi

PhonePe: 9092529250@ybl

Google Pay: engaldesam@okhdfcbank


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044-43804084

முந்தைய செய்திநிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி
அடுத்த செய்திதற்போது கிடைக்கிறது..! எங்கள் தேசம் – நவம்பர் மாத இதழ் | 2018