அறிவிப்பு: செப்.26, தியாகத்தீபம் திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல்

136

அறிவிப்பு: செப்.26, தியாகத்தீபம் திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் – தலைமையகம் | நாம் தமிழர் கட்சி

ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து உலகத்தாரின் மனசாட்சியை உலுக்கியவன், உறங்கிக்கிடந்த விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவைத் தன் உயிரைத் தந்து தட்டியெழுப்பிய புரட்சியாளன். தன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க இனத்தின் உரிமையே மேலானது என்று உணர்த்திய *தியாகத்தீபம் திலீபன்* அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுநாளான 26-09-2018 புதன்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் *தலைமை அலுவலகத்தில்* தலைமை ஒருங்கிணைப்பாளர் *சீமான்* தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் *தவறாமல்* பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி