அறிவிப்பு: மே 18, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – சென்னை (பெருங்குடி)

173

மே 18, இனப் படுகொலை நாள் : வீழ்வதல்ல தோல்வி! வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி!

‘சிதைந்து அழிந்து கொண்டிருக்கின்ற தமிழ்த்தேசிய இன மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்குப் போராடித்தான் ஆகவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த தேசியப் பெரும்பணியிலிருந்தும், வரலாற்றின் அழைப்பிலிருந்தும் தமிழ் இளம் பரமபரையினர் ஒருபோதும் ஒதுங்கிச் செல்ல முடியாது’ என்கிறார் நமது தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

‘வெற்றிடத்தைக் காற்று நிரப்பும்’ என்கிறார் சீனப்புரட்சியாளர் மாவோ. அரசியலில் கற்றவர்கள் நிரப்பாவிட்டால், கயவர்கள் நிரப்பி விடுவார்கள். அரசியல் ஒரு சாக்கடையா? ஆம்! அதனைப் பூக்கடையாக மாற்றலாம் நாம் ஒவ்வொருவரும் இணைந்தால்.

நாம் காலையில் பிதுக்குகிற பற்பசை, குடிக்கிற தேநீர், படிக்கிற பாடம், பார்க்கிற வேலை, வாங்குகிற சம்பளம் இப்படி எல்லாவற்றையும் நம் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு. அந்த அரசை நிர்மானிப்பது அரசியல். அந்த அரசியலை நாம் தீர்மானிப்போம் வாருங்கள்.

நமது மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, பாரம்பரிய வேளாண்மை, கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, பெண்ணிய உரிமை, சமூகநீதி, பொருளாதாரம், அரசியல், நிலவளம், நீர்வளம், மலைவளம், காட்டுவளம், கனிமவளம், கடல்வளம் ஆகியவற்றைக் காப்பது ஒவ்வொரு தமிழரின் உயரிய கடமை.

பசி, பஞ்சம், பட்டினி, ஊழல், கையூட்டு(இலஞ்சம்), வறுமை, அறியாமை, சாதிய இழிவு, தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை, சுரண்டல் இவை எல்லாவற்றையும் மாற்றுவோம் வாருங்கள்.

புரட்சி என்பது தலைகீழ் மாற்றம். ‘மாற்றம் என்பது மானுடத் தத்துவம், மாறாது என்ற சொல்லைத் தவிர மற்றவை அனைத்தும் மாறிவிடும்.’ என்கிறார் காரல் மார்க்ஸ்

இதுவரை சாதிக்காகக் கூடிய நாம், சார்ந்த மதத்திற்காகக் கூடிய நாம், கும்பிடுகிற சாமிக்காகக் கூடிய நாம் முதன்முறையாக நாம் பிறந்த பெருமைமிக்க தமிழர் என்கிற தேசிய இனத்திற்காகக் கூடுவோம். இது தமிழர் இன வரலாற்றில் பெரும்மாற்றம்.

மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம்

எழுச்சியுரை: செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாள்: 18-05-2018, வெள்ளிக்கிழமை, மாலை 04 மணி
இடம்: YMCA திடல், பெருங்குடி, சோழிங்கநல்லூர், சென்னை

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

நாம் தமிழர்!

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
044-43804084