காவிரிப் போராட்டம்: பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளவர்கள் விவரம்

22

காவிரிப் போராட்டம்: பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளவர்கள் விவரம் | நாம் தமிழர் கட்சி

கடந்த 10-04-2018 அன்று சென்னை அண்ணாசாலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை ஐபில் போட்டிகளைத் தமிழகத்தில் நடத்த வேண்டாம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு, தமிழர் கலை, இலக்கியப் பண்பாட்டு பேரவை, விவசாயச் சங்கத்தினர் மற்றும் சனநாயக அமைப்பினர் ஒன்று திரண்டு போராடினர். அப்போது போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாகச் சீமான், பெ.மணியரசன், பாரதிராஜா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பேரணியில் பங்கேற்ற 780 பேர் கைது செய்யப்பட்டு எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் அடைத்துவைக்கப்பட்டனர். நள்ளிரவு 01:30 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதில் சீமான் மீது கொலை முயற்சி (307) உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குகளும் பெ.மணியரசன், பாரதிராஜா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பேரணியில் பங்கேற்று கைதான 780 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும் ஐபில் போட்டியின் போது பார்வையாளராக சென்று மைதானத்திற்குள் காலணி வீசியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஐபில் போட்டிகளைப் புறக்கணிக்குமாறு முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததற்காக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலணி வீசியதற்காகக் கைது செய்யப்பட்டவர்கள் விவரம் (10-04-2018):
1. பிரபாகரன்
2. ஐயனார்
3. பொன்னுவேல்
4. மகேந்திரன்
5. ராஜ்குமார்
6. பிரகாஷ்
7. வாகைவேந்தன்
8. சுகுமார்
9. ஆல்பர்ட்
10. ஏகாம்பரம்
11. மார்டின்

கடந்த 10-04-2018 அன்று மாலை 04 மணியளவில் சேப்பாக்கம் தொடர்வண்டி நிலையம் அருகில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 09 பேர் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டனர். ஆனால் மாலை 06 மணிக்குமேல் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் பொய்யாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. கடந்த 13-04-2018 அன்று நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் உரிய ஆதாரங்களுடன் வாதாடி பிணை பெற்றனர். இன்று 17-04-2018 காலை பிணையில் அனைவரும் வெளிவந்தனர்.

ஐபில் போராட்டம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டு(10-04-2018) பிணையில் வெளிவந்தவர்கள் விவரம்(17-04-2018):
1. ராஜேஷ்
2. ஜெரால்ட்
3. தனசேகர்
4. நந்தகுமார்
5. கார்த்திக்
6. சரத்குமார்
7. மணிகண்டன்
8. சிவா
9. சரவணக்குமார்

பிரதமர் மோடி வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11-04-2018 அன்று நள்ளிரவில் நாம் தமிழர் கட்சியினர் 13 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரின் மீதும் பொய் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
அவர்கள் விவரம் பின்வருமாறு:
1. அன்புதென்னரசன்
2. எஸ்.கே சிவக்குமார்
3. விக்னேஷ்
4. ராஜாராமகிருஷ்ணன்
5. கணேசன்
6. ராம்ராஜ்
7. சிவக்குமார்
8. ஞானசேகரன்
9. சத்தியமூர்த்தி
10. கோகுலகிருஷ்ணன்
11. ஜீவா
12. சீமான் சுரேஷ்
13. இராயப்பன்

இதில் 03 பேர் மட்டும் கடந்த 13-04-2018 அன்று பிணை கிடைத்து வெளிவந்தனர்.
அவர்கள் விவரம் பின்வருமாறு:
1. கோகுலகிருஷ்ணன்
2. ஜீவா
3. சீமான் சுரேஷ்

மேலும் 09 பேர் நேற்று (16-04-2018) பிணை கிடைத்து வெளிவந்துள்ளனர்.
அவர்கள் விவரம் பின்வருமாறு:
1. அன்புதென்னரசன்
2. எஸ்.கே சிவக்குமார்
3. விக்னேஷ்
4. ராஜாராமகிருஷ்ணன்
5. கணேசன்
6. ராம்ராஜ்
7. சிவக்குமார்
8. ஞானசேகரன்
9. சத்தியமூர்த்தி

இன்று (17-04-2018) ஆலந்தூர் தொகுதிச் செயலாளர் இராயப்பன் பிணை கிடைத்து வெளிவந்துள்ளார்.

பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி 12-04-2018 அன்று, சென்னை விமான நிலையம் அருகே கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததற்காகக் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு உள்ளிட்ட பலர் பல்லாவரம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டனர். அப்போது ஏற்கனவே பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கில் சீமானைக் கைது செய்யக் காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது. “சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யாரேனும் 10 பேரை மட்டும் சிறைப்படுத்தவேண்டும், மற்றவர்களை விடுவிக்கிறோம்” என்று காவல் அதிகாரிகள் கூறினார்கள். மணியரசன், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவரும் வெளியேற மறுத்து, சீமானை கைது செய்யவிடாமல் “எங்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்புங்கள்!” என்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே வேளையில் வேறு இடத்தில் அடைக்கப்பட்டிருந்த இயக்குநர் ஐயா பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டு பேரவை சார்பாகப் பங்கேற்ற இயக்குநர்கள் அமீர், கௌதமன், வெற்றிமாறன், ராம் போன்றோரும் சீமானை விடுவிக்கக்கோரி வெளியேற மறுத்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இறுதியாகப் பேச்சுவார்த்தை நடத்தி இரவு 09 மணியளவில் சீமான் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்தனர்.

முன்னதாகச் சீமான், மணியரசன், தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு உள்ளிட்டோர் மாலை 06 மணிக்குமேலாகவும் விடுவிக்கப்படாமல் இருந்த செய்தியறிந்து அங்கு வந்து முழக்கங்கள் எழுப்பிய மனிதநேய சனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதும் பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது போன்ற பொய் வழக்குகள் புனையப்பட்டுள்ளது.

சீமான் கைதுக்கு எதிர்ப்பு: கைது செய்யப்பட்டவர்கள் விவரம் (12-04-2018) :
1. மன்சூர்அலிகான்
2. வீரபாண்டியன்
3. சரவணன்
4. ரூபன்
5. ஆகாஷ்
6. பாபுராசன்
7. ரங்கசாமி
8. சீனிவாசன்
9. அருண்கண்ணன்
10. முரளி
11. பொன்குமார்

ஐபில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டவர்கள் விவரம்:
நாள்: 14-04-2018
1. ஸ்டாலின்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

.