ஏப்ரல் 27 – கல்லணையில் கூடுவோம்! காவிரி உரிமை மீட்புக் குழு பேரழைப்பு | உறுதி ஏற்பு ஒன்று கூடல்

221

===================================
ஏப்ரல் 27 – கல்லணையில் கூடுவோம்! – காவிரி உரிமை மீட்புக் குழு பேரழைப்பு!
===================================
காவிரி உரிமையை மீட்க – உறுதி ஏற்பு ஒன்று கூடல் | பெ.மணியரசன், சீமான் பங்கேற்பு
===================================

இந்திய அரசே! – காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு!
தமிழ்நாடு அரசே – காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய்!
காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு!

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்ப் பேரரசன் கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன் ஒருங்கிணைப்பில் ஏப்ரல் 27 வெள்ளி காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த ஒன்றுகூடலில் – தமிழின உணர்வாளர்களும், உழவர் பெருமக்களும் பெருந்திரளாக வர வேண்டுமென காவிரி உரிமை மீட்புக் குழு அன்புரிமையுடன் அழைக்கிறது!

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!

நாள்: 27-04-2018 காலை 10 மணியளவில்
இடம்: கல்லணை, தமிழ்ப் பேரரசன் கரிகால் பெருவளத்தான் சிலை அருகில்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகாவிரிப் போராட்டம்: மன்சூர் அலிகான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் 18 பேர் பிணையில் விடுதலை
அடுத்த செய்திசுற்றறிக்கை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை நடத்தும் மாபெரும் கருத்தரங்கம் தொடர்பாக