அறிவிப்பு: தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைக்கும் கலந்தாய்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு – சீமான் பங்கேற்பு

33

அறிவிப்பு: தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைக்கும் கலந்தாய்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி

காவிரி நதிநீர் உரிமைப் பறிப்பு, தமிழர் வேளாண் நிலங்களில் மீத்தேன், ஹைட்ரோ-கார்பன், எரிஎண்ணெய் கிணறு, நியுட்ரினோ ஆய்வு, ஸ்டெர்லைட் ஆலை, அணுவுலை போன்ற பேரழிவுத் திட்டங்களைத் திணித்து தமிழர் வாழ்வாதாரத்தை அழிக்கும் மத்திய அரசை எதிர்கொள்வது குறித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் ஆலோசனை செய்வதற்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் தலைமையில் பல்வேறு தமிழ்த்தேசிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கலந்தாய்வுக் கூட்டம் நாளை 02-04-2018 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சேப்பாக்கம், சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெறவிருக்கின்றது. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெறுகிறது.

இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்கிறார்கள். மேலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அ.வினோத் மற்றும் தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம் உள்ளிட்ட பல்வேறு தமிழ்த்தேசிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
www.naamtamilar.org
+044-4380 4084