அறிவிப்பு: சிரியாவில் நடத்தப்படும் மனிதப்படுகொலையைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை

14

அறிவிப்பு: சிரியாவில் நடத்தப்படும் மனிதப்படுகொலையைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி

தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில், சிரியாவில் நடத்தப்படும் மனிதப்படுகொலையைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 06-03-2018 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை அடையாறில் உள்ள ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப் UNICEF) அலுவலகம் அருகில் நடைபெறவிருக்கிறது.

இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டனவுரையாற்றுகிறார்.

நாள் : 06-03-2018 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு

இடம் : ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப் UNICEF) அலுவலகம் அருகில், 2வது முதன்மைச் சாலை, அடையாறு.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி