அறிவிப்பு: இலங்கையில் தமிழ் இசுலாமியர்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

221

அறிவிப்பு: இலங்கையில் தமிழ் இசுலாமியர்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு | நாம் தமிழர் கட்சி

இலங்கையில் தமிழ் இசுலாமியர்கள் மீதான சிங்கள இனவெறி தாக்குதலைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் எதிர்வரும் 17-03-2018 சனிக்கிழமை, காலை 10 மணிக்கு சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு நடைபெறவிருக்கிறது.
இப்போராட்டத்தில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், தமிழர் நலப் பேரியக்கம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பங்கேற்கவிருக்கின்றன.

தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அ.வினோத், தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கண்டன முழக்கமிடுகிறார்கள்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, பகுதி, நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மகளிர், மாணவர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், குருதிக்கொடை, வழக்கறிஞர், உழவர், வர்த்தகர், தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கையூட்டு-ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி