சுற்றறிக்கை: தமிழர் திருநாள் பொங்கல் விழா ஏற்பாடுகள் குறித்து

525

சுற்றறிக்கை: தமிழர் திருநாள் பொங்கல் விழா ஏற்பாடுகள் குறித்து

வருகின்ற தை முதல் நாள் (14-01-2018) தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு வருகின்ற 10-01-2018 முதல் 16-01-2018 வரை நாம் தமிழர் கட்சி சார்பில் அனைத்து பகுதிகளிலும் உழவர் குடில் அமைத்து இயற்கை வேளாண் பேரறிஞர் நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் போன்று உழவர் தாத்தா வேடமணிந்து இயற்கையை வணங்கி மண்பானையில் பொங்கல் வைத்து குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி அவர்களிடம் இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை, இயற்கை விதைகள், இயற்கை மரக்கன்றுகள், சிறுதானிய உணவுகள், இனிப்புகள், செங்கரும்பு போன்றவற்றை வழங்கி உழவர் திருநாளை மிகச்சிறப்பாகக் கொண்டாடுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் பகுதிகளில் முன்னெடுக்கும் பொங்கல் நிகழ்வுகள் குறித்த செய்திகள், புகைப்படங்கள், மற்றும் காணொளிகள் போன்றவற்றை செய்தித்தொடர்பாளர் மூலமாக தலைமையகத்திற்கு மின்னஞ்சலில் (naamtamizharseithigal@gmail.com) அனுப்பி வைக்கவும்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி