அறிவிப்பு: 25-01-2018 மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம் – மறைமலை நகர்

95

அறிவிப்பு: 25-01-2018 மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம் – மறைமலை நகர் | நாம் தமிழர் கட்சி

எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் விதமாக 25-01-2018 (வியாழக்கிழமை) அன்று மாலை 5 மணிக்கு செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மறைமலை நகரில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் மாபெரும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இன்னிசை நிகழ்ச்சி: மக்கள் இசைப் பாடகர் கலைமாமணி புதுவைச்சித்தன்

நினைவுரை:

1. செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
2. மு.களஞ்சியம், தமிழர் நலப் பேரியக்கம்
3. அ.வினோத், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்
4. செ.முத்துப்பாண்டியன், மருது மக்கள் இயக்கம்
5. பெ.இளங்கோ, தமிழர் தேசியக் கட்சி,
6. செ.எழிலரசு, தமிழ் மக்கள் சமநீதி ஆட்சிக் கழகம்

அவ்வயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறவுகளும், நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், குருதிக்கொடை, வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கையூட்டு-ஊழல் ஒழிப்பு, மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கட்டாயம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 25-01-2018 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு
இடம்: பாவேந்தர் சாலை, மறைமலை நகர், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி
தொடர்புக்கு: 9380666905, 7401079885, 9841134991


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4384