அறிவிப்பு: ஆர்.கே நகர் தேர்தல் பரப்புரைத் திட்டம்: முதல் நாள் | நாம் தமிழர் கட்சி

133

அறிவிப்பு: ஆர்.கே நகர் தேர்தல் பரப்புரைத் திட்டம்: முதல் நாள் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி 01-12-2017 (வெள்ளிக்கிழமை) முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்குகிறது.

தொகுதியில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் நமது எண்ணத்தையும் சின்னத்தையும் கொண்டுபோய்ச் சேர்க்க வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தல், வீதிகளில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தல், துண்டறிக்கை பரப்புரை, வாகனப் பரப்புரை, தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் போன்ற பலவழிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறோம்.

முதல் நாள் பரப்புரைத் திட்ட விவரம்

நாள்: 01-12-2017 (வெள்ளிக்கிழமை)
நேரம்: காலை 08 மணி முதல் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு
இடம்: 47 வது வட்டம், கொருக்குப்பேட்டை மேம்பாலம் அருகிலிருந்து தொடங்குகிறது

நேரம்: மாலை 06 மணிக்கு தெருமுனைக்கூட்டம்
எழுச்சியுரை: இடும்பாவனம் கார்த்திக், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்.
இடம்: 47 வது வட்டம், பாரதி நகர், முருகன் கோயில் அருகில்

தொடர்புக்கு: 9003555217 / 9962079122

தேர்தல் பரப்புரைப் பணிகளில் அனைத்து தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளும் பங்கேற்று ஆர்.கே நகர் தொகுதி பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084