அறிவிப்பு: 54ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் – மலர்வணக்க நிகழ்வுகள்

66

அறிவிப்பு: 54ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் – மலர்வணக்க நிகழ்வுகள் | நாம் தமிழர் கட்சி

பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப்போற்றும் 54ஆம் ஆண்டு தேவர் திருநாளையொட்டி 30-10-2017 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, நந்தனத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். அதனையடுத்து காலை 11 மணிக்கு பெரம்பூர், பக்தவச்சலம் காலணி, முதல் தெருவில் (பி.வி.காலனி ரவுண்டானா அருகில்) உள்ள முத்துராமலிங்கத்தேவரின் திருவுருவச்சிலைக்கும் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்யவிருக்கிறார்.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 30-10-2017 திங்கட்கிழமை

மலர்வணக்க நிகழ்வு 1:
————————–
இடம்: சென்னை, நந்தனம்
நேரம்: காலை 10 மணி

மலர்வணக்க நிகழ்வு 2:
————————–
இடம்: பெரம்பூர், பக்தவச்சலம் காலணி, முதல் தெரு (பி.வி.காலனி ரவுண்டானா அருகில்)
நேரம்: காலை 11 மணி
தொடர்புக்கு: +91-9092091636


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி