அறிவிப்பு: தமிழகப் பெண்கள் செயற்களம் நடத்தும் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியில் சீமான் பங்கேற்பு – திருச்சி

258

அறிவிப்பு: தமிழகப் பெண்கள் செயற்களம் நடத்தும் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியில் சீமான் பங்கேற்பு – திருச்சி | நாம் தமிழர் கட்சி

தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் 11ஆம் ஆண்டு ‘தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி’ திருச்சி, தூய வளனார் (செயின்ட் ஜோசப்) கல்லூரியில் அக்டோபர் 6,7,8 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறவிருக்கிறது. கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வாக இன்று 07-10-2017 சனிக்கிழமை மாலை 4 மணியளவில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 12 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கும் “கலக்க வராங்க தமிழ்ப் பசங்க” தமிழ்ப் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்.

அவ்வயம் வாய்ப்புள்ள நாம் தமிழர் உறவுகள் தவறாமல் பங்கேற்கவும்.

நாள்: 07-10-2017 சனிக்கிழமை மாலை 4 மணி
இடம்: தூய வளனார் (செயின்ட் ஜோசப்) கல்லூரி, சத்திரம் பேருந்து நிலையம் எதிரில், திருச்சி


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி