அறிவிப்பு: காவல்துறையின் தடியடியால் காயமடைந்த காசிமேடு மீனவர்களை நேரில் சந்திக்கிறார் சீமான்

19

அறிவிப்பு: காவல்துறையின் தடியடியால் காயமடைந்த காசிமேடு மீனவர்களை நேரில் சந்திக்கிறார் சீமான் | நாம் தமிழர் கட்சி

விசைப் படகுகளில் அதிவேக சீன இன்ஜின் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காசிமேட்டில் மீனவர்கள் கடந்த 23-10-2017 அன்று காலையிலிருந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தைக் கலைக்க சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தினார்கள். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.

தடியடியில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நாளை 26-10-2017 வியாழக்கிழமை, காலை 10:30 மணிக்கு காசிமேடு மீனவர் பகுதிக்குச் செல்கிறார்.

அவ்வயம் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நாம் தமிழர் உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்கவும்.

தொடர்புக்கு: 9841064107

நாள்: 26-10-2017 வியாழக்கிழமை, காலை 10:30 மணி
இடம்: சென்னை காசிமேடு மீனவர் பகுதி

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084