தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 72ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு

36

செய்தி: தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 72ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 72ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 18-09-2017 திங்கட்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை, காந்தி மண்டபத்திலுள்ள இரட்டைமலை சீனிவாசனாரின் நினைவிட திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,
தமிழக அரசு சரிவர இயங்கவில்லை எனவே தான் தமிழகம் பல்வேறு பிரச்சினைகளால் போராட்டக்களமாக மாறி இருக்கிறது. ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவில் இருப்பவர்களுக்கு கட்சியையும் சின்னத்தையும் பதவியையும் தக்கவைத்துக்கொள்வதே பெரும்பிரச்சினையாக இருக்கிறது. அவர்கள் எப்படி மக்கள் பிரச்சினைகளை கவனிப்பார்கள் என்று குற்றஞ்சாட்டினார். மனதில் அழுக்கை வைத்துக்கொண்டு மண்ணில் இருக்கும் அழுக்கை அகற்றுவது போல் நடிக்கும் பாஜக-வின் தூய்மை இந்தியா திட்டம் பேச்சளவில் மட்டுமே இருக்கிறது என்று குறிப்பிட்டார். மேலும் இந்தியாவின் குப்பைத்தொட்டியாக தமிழகம் மாறி வருகிறது என்றும் தமிழகத்தின் குப்பைத்தொட்டியாக கடலூர் மாற்றப்பட்டுவிட்டது . கழிவு மேலாண்மைக்கென்று ஆக்கபூர்வமான சிறப்பு திட்டங்கள் வகுக்காமல் வெறும் தூய்மை இந்தியா என்று கூறுவதில் ஒரு பயனுமில்லை என்றும் குறிப்பிட்டார். பாஜக கொண்டுவரும் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றப்போகிறது. தமிழக சபாநாயகர் 18 எம்.எல்.ஏ களை தகுதி நீக்கம் செய்கிறேன் என்கிற பெயரில் நகைச்சுவை செய்கிறார். மக்கள் நீட் தேர்வை நீக்க போராடினால் இவர்கள் எம்.எல்.ஏ களை நீக்க பாடுபடுகிறார்கள். 23ம் புலிகேசியின் ஆட்சியே மேல் என்பது போல் இருக்கிறது அதிமுக ஆட்சி என்றார். 


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084