அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு – கிழக்கு தாம்பரம் (15-08-2017)

55

அறிவிப்பு: நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு – தாம்பரம்(15-08-2017)

நாற்புறமும் சிக்கல்களால் சூழப்பட்டு நிர்கதியற்று நிற்கிற தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்கும், விடியலுக்குமான இறுதி வாய்ப்பாக நம் கைகளிலே வரலாறு வழங்கியிருக்கிற நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் பெரும்படையினை இன்னும் பன்மடங்கு வலிமைப்படுத்தவும், கட்சிப் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவும், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து கலந்தாலோசிக்கவும், கிராமங்கள்தோறும் கிளை அமைக்கவும், ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்து திட்டமிடவுமான ஓர் ஒன்றுகூடலாக நமது கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நாளை 15-08-2017, செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் காஞ்சி மாவட்டம், கிழக்கு தாம்பரம், சி.எஸ்.ஐ. தேவாலயம் எதிரிலுள்ள அன்னை அருள் திருமண அரங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.. எனவே மாநில/மாவட்ட/தொகுதி/பாசறைப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதனைத்தொடர்ந்து மாலை 3 மணியளவில் பொதுக்குழு தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநிகழ்ச்சி நிரல்: உழவர் பாதுகாப்பு மாநாடு – கும்பகோணம் | நாம் தமிழர் உழவர் பாசறை
அடுத்த செய்திதீரன் சின்னமலை 212ஆம் ஆண்டு நினைவுநாள்: வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை