நிகழ்ச்சி நிரல்: உழவர் பாதுகாப்பு மாநாடு – கும்பகோணம் (05-08-2017) | நாம் தமிழர் உழவர் பாசறை
உழவு இல்லையேல் உணவு இல்லை!
உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை!
உயிர்கள் இல்லையேல் உலகு இல்லை!
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்! – என்ற உயர்ந்த நோக்கத்தோடு, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை நடத்தும் உழவர் பாதுகாப்பு மாநாடு நாளை 05-08-2017 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிவரை கருத்தரங்கம், பேரணி, மாநாடு என்று மூன்று பகுதிகளாக நடைபெறவிருக்கிறது.
****************************************************
—- இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவுக் கருத்தரங்கம் —–
நேரம்: காலை 10 மணி
இடம்: எஸ்.இ.டி. அரங்கம், காமராசர் சாலை, கும்பகோணம்
தலைமை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்
தொடக்கவுரை: மருத்துவர் சித்தார்த்தன்
வரவேற்புரை: கல்வியாளர் ஹுமாயுன், மாநில ஒருங்கிணைப்பாளர்
கருத்துரையாளர்கள்:
வழக்கறிஞர் அ.நல்லதுரை, மாநில ஒருங்கிணைப்பாளர்
தலைப்பு: கதிராமங்கலத்தின் போராட்டக் களமும் படிப்பினைகளும்.
உயர்திரு. இளங்கோ கல்லணை
தலைப்பு: நம்மாழ்வார் மீது சுமத்தப்படும் அவதூறுகளும், இயற்கை வேளாண் மரபுகளும்
இறைநெறி இமயவன்
தலைப்பு: தமிழர் வாழ்வியலும் திணை ஒழுக்கம் சார்ந்த வேளாண்மையும்
உயர்திரு. ம.செந்தமிழன்
தலைப்பு: பண்டைத் தமிழர் வேளாண் மரபுகள்
சிறப்பு விருந்தினர்கள்:
முனைவர். ஜக்மோகன் சிங், ஊடகவியலாளர், பஞ்சாப்
பத்மஸ்ரீ: ஜாதவ் பேயிங், சூழலியல் போராளி, அஸ்ஸாம்
நெறியாளர்: முனைவர் செந்தில்நாதன் சேகுவேரா, மாநில ஒருங்கிணைப்பாளர், வீரத்தமிழர் முன்னணி
****************************************************
——- உழவர் எழுச்சிப் பேரணி ——-
நேரம்: மாலை 5 மணி
இடம்: காந்தி பூங்கா, கும்பகோணம்
தலைமை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்
தொடங்கி வைப்பவர்கள்:
மதிப்புமிகு. கலையரசி, கதிராமங்கலம் போராட்டக்குழு – மகளிர் அணி பொறுப்பாளர்,
மதிப்புமிகு. செந்தில்தாஸ், நெடுவாசல் போராட்டக்குழு பொறுப்பாளர்
***************************************************
—– உழவர் பாதுகாப்பு மாநாடு —–
நேரம்: மாலை 6 மணி
இடம்: காந்தியடிகள் சாலை, கும்பகோணம்
தலைமை: வழக்கறிஞர் மோ.ஆனந்த், மாவட்டச் செயலாளர், கும்பகோணம்.
முன்னிலை:
வழக்கறிஞர் மணி.செந்தில், மாநில இளைஞர் பாசறை செயலாளர்.
வழக்கறிஞர் இரா.வினோபா, தஞ்சை வடக்கு மண்டலச் செயலாளர்.
எழுச்சியுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்
***************************************************
கதிராமங்கலத்தைக் காக்க…
நெடுவாசலை மீட்க…
இந்திய ஒன்றிய அளவிலான
நாம் தமிழரின் பேரெழுச்சியான ஒன்று கூடல்!
திரள்வோம்..! திரள்வோம்..!
பகை மிரளத் திரள்வோம்..!
தொடர்புக்கு: +91- 733 9193 733, 979 0668 113
வலைதளம்: https://goo.gl/TLmrvF
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044-4380 4084