அறிவிப்பு: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான நெடுவாசல் மக்களின் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு

22

அறிவிப்பு: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான நெடுவாசல் மக்களின் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு – 11-07-2017 | நாம் தமிழர் கட்சி

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த விளைநிலங்களைக் கையகப்படுத்தி, குழாய்களை பதித்து வருகின்றது. மத்திய அரசின் இத்திட்டத்தால் விவசாயம் அழிந்து விடும், நிலத்தடி நீர் மாசடைந்து அங்கு வாழ்வதே கேள்விக்குறியாகி விடும் என கூறி அக்கிராமத்தைச் சார்ந்த மக்கள் இரண்டாம் கட்டமாக, தொடர்ந்து 89 நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மண்ணை மீட்கவும் வாழ்வாதாரத்தைக் காக்கவும் இயல்பு வாழ்க்கையைத் துறந்து அறவழியில் போராடிவரும் மக்களைச் சந்தித்து பேச, போராட்டத்திற்கு ஆதரவளித்து வலிமைசேர்க்க நாளை 11-07-2017 செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நெடுவாசல் விரைகிறார்.

அதுசமயம் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி,வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மண்ணைக் காக்க மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம் நெடுவாசலில்…!

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி