காயிதே மில்லத் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – தாம்பரம் | 08-06-2017

300

அறிவிப்பு: காயிதே மில்லத் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – தாம்பரம் | 08-05-2017 | நாம் தமிழர் கட்சி
====================================
நமது ஐயா பெருந்தமிழர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 122வது பிறந்தநாளையொட்டி புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நாளை 08-06-2017 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தாம்பரம் சண்முகம் சாலை அருகே நடைபெறவிருக்கிறது.

அதுசமயம் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆன்றோர் பாசறை, இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, மகளீர் பாசறை, உழவர் பாசறை, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, மீனவர் பாசறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாசறை, குருதிக்கொடை பாசறை, வழக்கறிஞர் பாசறை, மருத்துவர் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084