அறிவிப்பு: 04-06-2017 கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – திருவாடானை சட்டமன்றத் தொகுதி

380

அறிவிப்பு: 04-06-2017 கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – திருவாடானை | நாம் தமிழர் கட்சி
======================================
இன்று 04-06-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு, திருவாடானையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று எழுச்சியுரையாற்றுகிறார்.

அதுசமயம் திருவாடானை சட்டமன்றத் தொகுதி மற்றும் அதனைச்சுற்றியுள்ள தொகுதிகளில் உள்ள மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி. வட்ட, பகுதி, கிளை, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆன்றோர் பாசறை, இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, உழவர் பாசறை, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, மீனவர் பாசறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாசறை, குருதிக்கொடை பாசறை, வழக்கறிஞர்கள் பாசறை, மருத்துவர்கள் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர்!

வலைதளம்: https://goo.gl/XB5vYS


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084