உயிர்க்காக்க உதவுங்கள்

21

பேரன்புமிக்க உறவுகளே!

உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் எனது மகள் வித்தியா அல்போன்ஸ் இரத்தப்புற்று நோயினால் பாதிக்கபட்டிருப்பது நீங்கள் அறிந்த ஒன்றே அவருக்கு இதுவரைக்கும் நான்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு எதுவும் பலனளிக்காத நிலையில் வைத்தியர்களால் இரண்டு மாதகால அவகாசம் தரப்பட்டுள்ளது. கடைசியாக ஒரேயொரு சிகிச்சை மட்டும் உள்ளது, அதாவது வித்தியாவின் என்புமச்சையோடு (BornMarrow) பொருந்தக்கூடிய இன்னொருவரின் என்புமச்சையை மாற்றம் செய்தால் அவர் குணமடையமுடியும். என்புமச்சை தானம் என்பது இரத்ததானம் செய்வதைப் போன்ற ஓர் நிகழ்வே ஆகும் என்புமச்சை தானம் (BornMarrow) செய்பவருக்கு எந்தவிதமான பாதிப்புக்களோ பக்கவிளைவுகளோ ஏற்படாது என்பது நூற்றுக்கு நூறுவீதம் வைத்தியர்களினால் உறுதிப்படுத்தப்பட்டதாகும்.

உறவுகளே மருத்துவர்களின் தகவல்களின்படி இதுவரைக்கும் நீங்கள் அனுப்பிய உமிழ்நீர்(எச்சில்) பரிசோதனையின்படி வித்தியாவின் என்புமச்சையோடு (BornMarrow) ஒத்துப்போகவில்லை இது இலட்சத்தில் ஒருவருடையதுதான் ஒத்துப்போகக்கூடியது வித்தியாவிற்கான என்புமச்சை தானம் செய்யக்கூடியவர் பதினேழு வயதிலிருந்து நாற்பது வயதுக்குட்பட்டவராகவும் ஐம்பது கிலோ நிறைக்கு மேற்பட்டவராகவும் இருக்கவேண்டும். ஆதலால் உறவுகளே ஓர் உயிரைக்காக்க முன் வாருங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பினூடாகச் சென்று உங்களினுடைய பெயர், விபரம், வயது, நிறை முகவரி என்பவற்றை பதிவு செய்யவும். பதிவு செய்தபின் நான்கு நாட்களில் உங்கள் முகவரிக்கு சிறு பையினுள் பிளாஸ்டிக் குப்பி ஒன்று அனுப்புவார்கள். நீங்கள் செய்ய வேண்டியது அந்தக் குப்பியினுள் உங்கள் எச்சிலை துப்பி அந்த முகவரிக்கு திருப்பி அனுப்ப வேண்டியதுதான் .ஆனால் எச்சில் துப்புவதற்க்கு அரைமணி (30நிமிடங்கள்) நேரத்துக்கு முன் எதையும் உண்ணவோ, குடிக்கவோ கூடாது ஏனெனில் எச்சிலோடு வேறு எதுவும் கலக்கக்கூடாதென்பதினாலேயாகும். பிற்பாடு உங்களுடைய எச்சில் பரிசோதனை(Test ) செய்யப்பட்டு அது வித்தியாவின் என்புமச்சையோடு பொருந்தினால் அவர்கள் உங்களோடு தொடர்புகொள்ளுவார்கள்.

அன்பான உறவுகளே உன்னதமான ஓர் உயிரினைக் காத்திட, உதவிட முன்வாருங்கள்
மேலதிக விபரங்களுக்கு கீழ்காணும் இணைப்பைத் திறந்து உங்கள் நாட்டிற்குரிய தொலைபேசி இலக்கத்தை அழையுங்கள்

http://www.bmdw.org/index.php?id=addresses_members&no_cache=1

இவ்வண்ணம் கோரும்

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைபாளர்,
நாம் தமிழர் கட்சி

viththiya-bornmorrow