பொதுக்குழுவில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

22

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் 14-06-15 அன்று கூடுவாஞ்சேரி, என்.பி.ஆர்.திருமண அரங்கத்தில் நடைபெற்றது.இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார்.

அவை பின்வருமாறு:

நாகர்கோவில் – கா.கலைக்கோட்டுதயம், தமிழன் தொலைக்காட்சி நிறுவனர்
சிவகங்கை – வழக்கறிஞர் எழில்குமரன்
திருவாடனை -வழக்கறிஞர் ராஜீவ்காந்தி என்கிற அறிவுச்செல்வன்
சோழிங்கநல்லூர் – வழக்கறிஞர் இராசன்
திருப்பத்தூர் – கோட்டைக்குமார், திரைப்படத் தயாரிப்பாளர்
மைலம் – மருத்துவர் விஜயலெட்சுமி
அம்பத்தூர் – அன்புத்தென்னரசன்
கவுண்டம்பாளையம் – இயக்குனர் கார்வண்ணன்
கும்பகோணம்- வழக்கறிஞர் மணி செந்தில்

இயற்கெனவே, பேராவூரணி தொகுதிக்கு திலீபன் அவர்களும், சிங்காநல்லூர் தொகுதிக்கு பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களும்வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக்கூட்டம் கூடுவாஞ்சேரியில் நடந்தது.
அடுத்த செய்திமணிசெந்தில் அண்ணனின் புத்தக வெளியீடு விழா நிகழ்ச்சி (speech at mani senthil) -15-06-2015