சென்னை சூப்பர் சிக்சஸ் நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி புதிய தலைமுறை குழுமம் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மனு.

29

புதிய தலைமுறை சென்னை சூப்பர் சிக்சஸ் என்ற பெயரில் நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக இலங்கையின் கிரிகெட் வீரரும் இலங்கை இனவெறி அதிபர் ராஜ பக்சேவின் தீவிர ஆதரவாளருமான சனத் ஜெயசூர்யா அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.

தமிழீழத்தில் அப்பாவித் தமிழர்களை கொன்றுவிட்டு தற்போது தமிழகத்தில் இருக்கும் மீனவத் தமிழர்களை கொன்றுகுவித்து வரும் சிங்கள இனவெறி அரசுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுவருவது ஒட்டுமொத்த தமிழர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான புதிய தலைமுறை குழுமத்தின் தலைவர் திரு க.பச்சமுத்து அவர்கள் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஜெயசூர்யா அவர்கள் பங்குபெறும் இந்நிகழ்ச்சியை ரத்து செய்யவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

இச்சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான வழக்கறிஞர் பரசுராம்,அன்புத்தென்னரசு,ஆவல்கனேசன்,அமுதாநம்பிதங்கராசு,மகேந்திரவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.