முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – மே 01,உழைப்பாளர் நாள் விழா

296

க.எண்: 2026040185
நாள்: 30.04.2026

மே 01,உழைப்பாளர் நாள் விழா
(தலைமை அலுவலகம் – சென்னை)
சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைக்கும் மக்களின் உரிமையை, தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து நிலைநிறுத்திய தொழிலாளர்களால், உலகளாவிய அளவில் தொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டதைப் போற்றும் விதமாக உலகெங்கும் உழைப்பாளர் நாளாகக் கொண்டாடப்படுகின்ற திருநாளான மே நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை
ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தொழிற்சங்கப் பேரவை சார்பாக சித்திரை 18ஆம் நாள் (01-05-2026) அன்று காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகம் இராவணன் குடிலில் உழைப்பாளர் நாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கிறது.
தொழிற்சங்கப் பேரவையினர் முன்னெடுக்கும் இவ்விழாவில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர் தமிழா
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதேர்தல் 2026 – குன்னம் தொகுதி வேட்பாளர் வழக்கு விபரம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மே 18, இனப் படுகொலை நாளையொட்டி மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்