அறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கலந்தாய்வு மற்றும் பயிற்சிக் கூட்டம் | நாம் தமிழர் கட்சி
தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கலந்தாய்வு மற்றும் பயிற்சிக் கூட்டம் வருகின்ற மே 5ஆம் தேதி திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள பி.எல்.ஏ. ரத்னா ரூபி ஹால் (PLA Rathna Ruby Hall) என்ற அரங்கில் நண்பகல் 1 மணி முதல் 6 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு அனைத்து தொகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் தொழில்நுட்பப் பிரிவின் அடுத்தகட்டப் பணிகள் மற்றும் அதற்கான செயலியில் கொண்டுவரவிருக்கும் புதிய வசதிகள் மற்றும் மாறுதல்கள் பற்றி விவாதிக்கவிருப்பதால் இந்த கூட்டத்தில் அனைத்து பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ளவும் : மகிழன்(9003392446) / மதன்(9840438400)
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி