அறிவிப்பு: வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – திருவண்ணாமலை

1020

அறிவிப்பு: வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – திருவண்ணாமலை | நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை

நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு இளைஞர் பாசறை முன்னெடுக்கும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நாளை (09-02-2019) சனிக்கிழமை மாலை 5 மணியளவில் திருவண்ணாமலை, காந்தி நகர் திடலில் நடைபெறவிருக்கிறது. இதற்கான அனுமதி பெரும் சட்டப்போராட்டத்திற்குப் பிறகு இன்று தான் கிடைத்துள்ளது.

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இனத்தின் உயிரே இளந்தமிழர்! எதற்கும் அஞ்சா நாம் தமிழர்!

நாம் தமிழர் இளையோர் பெருங்கூட்டம் பகைமிரள திரள்வோம் திருவண்ணாமலையில்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருபுவனம் இராமலிங்கம் கொலையின் உண்மைக்குற்றவாளிகளைக் கண்டறிந்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – திருவண்ணாமலை | சீமான் எழுச்சியுரை