அறிவிப்பு: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: சென்னை விமான நிலையம் முற்றுகை – காவிரி உரிமை மீட்புக் குழு

42

அறிவிப்பு: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: சென்னை விமான நிலையம் முற்றுகை – காவிரி உரிமை மீட்புக் குழு | நாம் தமிழர் கட்சி https://goo.gl/bLZwWr

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன், நியுட்ரினோ ஆய்வு, ஸ்டெர்லைட் ஆலை, அணுவுலை, சாகர்மாலா உள்ளிட்ட பல்வேறு பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தியும் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக, நாளை ஏப்ரல்-12 அன்று தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ.மணியரசன் தலைமையில் கருப்பு கொடியேந்தி சென்னை விமான நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என இன்று (10-04-2018) சேப்பாக்கத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு, தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அ.வினோத், மருது மக்கள் இயக்கத் தலைவர் முத்துப்பாண்டி உள்ளிட்ட பல்வேறு தமிழ்த்தேசிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

மேலும் இயக்குநர் ஐயா பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பாக இயக்குநர்கள் அமீர், வ.கௌதமன், இராம், வெற்றிமாறன், கோபி நயினார் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள்.

நாள்: 12-04-2018 (வியாழக்கிழமை) காலை 8 மணி
கூடுமிடம்: சென்னை விமான நிலையம் எதிரில் உள்ள மைதானம்

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள், அனைத்துப்பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்குமாறு உரிமையுடன் அழைக்கிறோம்.

குறிப்பு: அனைத்து தாய்த்தமிழ் உறவுகளும் கட்சி கொடிகளைத் தவிர்க்குமாறு அன்புரிமையுடன் கோருகிறோம்.

வென்றாக வேண்டும் தமிழ்! ஒன்றாக வேண்டும் தமிழர்!


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி