இனமான தமிழன் அப்துல் ரவூப் தந்தை அசன் முகம்மது மறைவு! -சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி

153

ஈழத்தமிழருக்காகத் தன் இன்னுயிர் துறந்து ஆகுதீயான தமிழ்நாட்டின் முதல் ஈகி, முத்துக்குமாருக்கு மூத்த நெருப்பு, இனமான தமிழன் அப்துல் ரவூப் அவர்களின் அருமைத் தந்தை அசன் முகம்மது அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

தன் உடலில் பற்ற வைத்த நெருப்பின் மூலம், மங்கிப் போயிருந்த தமிழர் இன உணர்ச்சியை உலகத் தமிழர் உள்ளங்களில் பொங்கியெழ செய்து, ஈழம் என்பது தொலைதூர தீவல்ல, அது நம் இனத்தின் இன்னொரு தாயகம் என்பதை உணர்த்தி தமிழ்நாட்டில் புதிய எழுச்சியைத் தோற்றுவித்த பெருந்தமிழன் அப்துல் ரவூபை தமிழினத்திற்குத் தந்த பெருந்தகை அப்பா அசன் முகம்மது அவர்களை உலகத் தமிழினம் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரும்.

அப்பாவின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உலகெங்கும் பரவி வாழும் தாய்ததமிழ் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அப்பா அசன் முகம்மது அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்..!

https://x.com/Seeman4TN/status/1705230699576308067?s=20

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகாஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
அடுத்த செய்திமின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பதவியிடங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்