அறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 62ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு (அடையாறு)

18
அறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 62ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு (அடையாறு) | நாம் தமிழர் கட்சி
இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்! உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குறியீடு! இழந்துவிட்ட உரிமைகளைப் பிச்சைக்கேட்டுப் பெறமுடியாது; போராடித்தான் பெற்றாகவேண்டும். கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 62ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 06-12-2018 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்யவிருக்கிறார்.
 
அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
 
இடம்: அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம், டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலை, கற்பகம் நிழற்சாலை, அடையாறு, சென்னை – 600028
https://goo.gl/maps/pwt9DS2ui3M2
 
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084