பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை சீனாவும், ரஸ்யாவும் தடுக்கக்கூடாது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

21

சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் தடுக்கக்கூடாது என வொசிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதன் பணிப்பாளர் பிராட் அடம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 25 ஆம் நாள் வெளியிடப்பட்ட ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் இரு தரப்பினரும் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறைவடைந்து இரு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், அதில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என அறிக்கை தெரிவித்துள்ளது.

எனவே அங்கு மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறலகள் குறித்து சுயாதீன விசாரணைகள் தேவை என அறிக்கையில் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அதனை தடுப்பதற்கு சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் முன்வரக்கூடாது.

நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு இந்த நாடுகள் ஆதரவுகளை அளிக்கவேண்டும். சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் ஏப்ரல் மாதம் பாதுகாப்புச்சபையில் விவாதிக்கப்பட்டபோது அதனை சீனாவும், ரஸ்யாவும் எதிர்த்திருந்தன. இது மூனின் நடவடிக்கைகளை பாதித்துள்ளது.

எனவே ஐ.நாவின் உறுப்பு நாடுகள் இந்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு ஆதரவுகளை வழங்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி : ஈழம் இ நியூஸ்

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வீரவணக்க நிகழ்வு.
அடுத்த செய்திஐக்கிய நாடுகள் நிபுணர் குழு மூன்று முட்டாள்கள் குழு: இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச