மக்கள் சந்திப்பு | மீண்டும் பாதிக்கப்பட்ட சென்னை அனகாபுத்தூர் மக்களுக்கு சீமான் நேரில் ஆதரவு!

21

சென்னை, அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை-எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு என கூறி, இடித்து தரைமட்டமாக்கி, மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி வரும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாகத் துணைநிற்கும் விதமாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 14-11-2023 அன்று அனகாபுத்தூருக்கு நேரில் சென்று, வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடிவரும் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் சந்தித்தார்.