முக்கிய அறிவிப்பு: சட்டத்தரணி மூத்தவர் தடா நா.சந்திரசேகரன் இறுதி வணக்க நிகழ்வு

349

க.எண்: 2023080390
நாள்: 14.08.2023

முக்கிய அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர், சட்டத்தரணி மூத்தவர் தடா நா.சந்திரசேகரன் அவர்கள் இன்று 14-08-2023 மாலை 6 மணியளவில் மறைவெய்தியதையடுத்து, மூத்தவரின் திருவுடல், இறுதி வணக்கம் செலுத்துவதற்காக சென்னை கொட்டிவாக்கம், ஜெகநாதன் தெருவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நாளை (15-08-2023) காலை 11 மணிவரையிலும் வைக்கப்படவிருக்கிறது. அதன்பிறகு, மூத்தவரின் மதுரை கே.கே.நகர் இல்லத்திற்கு இரவு 7 மணி அளவில் கொண்டு செல்லப்பட்டு, நாளை மறுநாள் (16-08-2023) காலை 9 மணியளவில் நல்லடக்க இறுதி நிகழ்வுகள் நடைபெறவிருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி