பெருந்துயரச் செய்தி: நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி தடா நா.சந்திரசேகரன் அவர்கள் மறைவு

290

க.எண்: 2023080389அ

நாள்: 14.08.2023

பெருந்துயரச் செய்தி

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை. விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி. இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்திய பெருமகன். நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர். பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய மூத்தவர்
ஐயா தடா நா.சந்திரசேகரன் அவர்கள் இன்று 14-08-2023 மாலை 6 மணியளவில் மறைவெய்தினார் எனும் துயரச் செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்!

ஐயாவின் மறைவையொட்டி, பெருந்துயரின் அடையாளமாக கட்சியின் அனைத்து மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், கிளை அலுவலகங்களிலும், பாசறை அலுவலகங்களிலும், கட்சியின் அனைத்து கொடிக் கம்பங்களிலும் கட்சிக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி