அமலாக்கத்துறை இயக்குநரின் நியமனமே சட்டவிரோதம் எனில்..? – பாஜக அரசுக்கு சீமான் கேள்விகள்

48

அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு பாஜக அரசு மூன்றாவது முறையாக வழங்கிய முறைகேடான பதவி நீட்டிப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அவரது நியமனம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளது இந்திய உச்சநீதிமன்றம். அமலாக்கத்துறை இயக்குநரின் நியமனமே சட்டவிரோதம் எனில், சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட இயக்குநரின் உத்தரவுப்படி அமலாக்கத்துறை தொடுத்த வழக்குகள், எடுத்த கைது நடவடிக்கைகள் அனைத்துமே சட்டவிரோதமானது இல்லையா? அவையெல்லாம் தொடருமா? அல்லது ரத்து செய்யப்படுமா?

அமலாக்கத்துறை எந்தவொரு தனிநபரையும் சார்ந்ததல்ல என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அப்படியென்றால் சஞ்சய் குமார் மிஸ்ரா தனிநபர் இல்லையா? கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மூன்றுமுறை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? பாசிச பாஜக அரசின் ஒட்டுமொத்த எதேச்சதிகாரச் செயல்பாட்டின் ஒற்றை வடிவம் சஞ்சய் மிஸ்ரா என்பதால் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டதா?

ED Director Appointment Illegal: Will the Cases Filed by the ED Be Termed Illegal?

The Supreme Court of India has ruled that the appointment of Enforcement Directorate (ED) Director Sanjay Kumar Mishra by the BJP Government for the third time is illegal in a case filed against him.

If the appointment of the ED Director is illegal, are not the cases filed and the arrests made by the ED also illegal? Will the ED orders be followed or cancelled?

Home Minister Amit Shah has said that the ED does not belong to any individual. So isn’t Sanjay Kumar Mishra an individual?

What was the need to give him an extension three times since 2020?

Was the extension made because Sanjay Mishra was the only embodiment of the entire autocratic functioning of the fascist BJP government?

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஎங்கள் மண்! எங்கள் உரிமை! – இராமநாதபுரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு