அர்ஜுனா மற்றும் கேல் ரத்னா விருதுகளுக்கு தேர்வாகியுள்ள தமிழக இளையோருக்கு சீமான் வாழ்த்து!

35

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் சதுரங்க விளையாட்டு வீரர் அன்பு மகன் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அன்பு மகள் இளவேனில் வாலறிவன் மற்றும் பாரா-ஒலிம்பிக் இறகுப் பந்தாட்ட போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றெடுத்த மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவி அன்பு மகள் ஜெர்லின் அனிகா ஆகியோர் விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருதிற்குத் தேர்வாகியிருப்பதுடன், மேசைப்பந்து விளையாட்டு வீரர் அன்புத்தம்பி அசந்தா சரத் கமல் விளையாட்டுத் துறையின் உயரிய விருதான கேல் ரத்னா விருதிற்குத் தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் அளிக்கிறது.

விருதுகளை வென்ற வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்கள் பல வென்று சாதனை படைக்கவும், தமிழகத்திலிருந்து மேலும் பல இளம் வீரர், வீராங்கனைகள் உருவாக வழிகாட்டியாய் அமையவும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி