மறைமலைநகரில் வீடுகளை இடித்து பூர்வகுடி மக்களை வெளியேற்றும் திமுக அரசு! – பாதிக்கப்பட்ட மக்களுடன் களத்தில் சீமான்

34

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட ராஜீவ் காந்தி நகர், வில்லியர் காலனி, கலைஞர் கருணாநிதி நகர், இரயில்நகர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்துவரும் 450 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய பூர்வகுடி மக்களின் வீடுகளை இடிக்கும், திமுக அரசின் கொடுங்கோன்மையை கண்டித்து அதனை உடனடியாக நிறுத்தக்கோரி, பூர்வகுடி தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் திமுக அரசின் திட்டமிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் மறைமலைநகர் மக்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 19-05-2022 அன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.