‘பெண் எனும் பேராற்றல்!’ – நாம் தமிழர் மகளிர் பாசறை நடத்திய சிறப்பு கருத்தரங்கம் [காணொலிகள் மற்றும் புகைப்படங்கள்]

2802

மகளிர் நாளையொட்டி ‘பெண் எனும் பேராற்றல்’ எனும் தலைப்பில் சமூக வளர்ச்சியில் பெண்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நாம் தமிழர் மகளிர் பாசறை நடத்திய சிறப்பு கருத்தரங்கத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி அவர்கள் தலைமை வகித்தார்.

காலை 10 மணியளவில் அகவணக்கம், வீர வணக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்று நிகழ்வு தொடங்கியது. இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பர்ஹானா வரவேற்புரை நிகழ்த்த, மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சுமித்ரா கவிதை வாசிக்க. மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகலதா ராம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, மாநில ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி தலைமை உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற காலை அமர்வில் மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் செ.அனிஸ் பாத்திமா, மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜே.ஆன்றனி அஸ்லின், மு.கார்த்திகா, மா.கி.சீதாலட்சுமி, ச.விஜயலட்சுமி மற்றும் மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இளவஞ்சி ஆகியோர் கருத்துரையாற்றினர்.

மதிய உணவுக்குப் பிறகு தொடங்கிய மாலை அமர்வில்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பி.காளியம்மாள், முனைவர் பொன்.கெளசல்யா ஆகியோர் கருத்துரையாற்றினர். தொடர்ந்து, சிறப்பு விருந்தினாராகப் பங்கேற்ற சமூக செயற்பாட்டாளர் நாச்சியாள் சுகந்தி அவர்கள்  சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்கில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொருவராக வாசித்தனர்.

நிகழ்வின் இறுதியாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் சிறப்புரையாற்றினார்.

மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நர்மதா அவர்கள் கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து நிறைவுரையாற்றினார்.

♦️ காணொளி முழுதொகுப்பு 🖥️

♦️ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ;

வரவேற்புரை :

♦️ பாத்திமா பர்ஹானா
இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

தலைமை உரை :

♦️ அமுதா நம்பி
மாநில ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

கவிதை வாசிப்பு ;

♦️ கவிஞர் சுமித்ரா
மகளிர் பாசறை- நாம் தமிழர் கட்சி

 

கருத்துரையாளர்கள்:

♦️ ஜே. ஆன்றனி ஆஸ்லின்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மகளிர் பாசறை -நாம் தமிழர் கட்சி

♦️ செ. அனிஸ் பாத்திமா
மாநில ஒருங்கிணைப்பாளர்
மாணவர் பாசறை- நாம் தமிழர் கட்சி

♦️ மு. கார்த்திகா
மாநில ஒருங்கிணைப்பாளர்
மகளிர் பாசறை-நாம் தமிழர் கட்சி

♦️ மா.கி.சீதாலட்சுமி
மாநில ஒருங்கிணைப்பாளர்
மகளிர் பாசறை- நாம் தமிழர் கட்சி

♦️ மருத்துவர் இளவஞ்சி
மாநில ஒருங்கிணைப்பாளர்
மருத்துவப் பாசறை- நாம் தமிழர் கட்சி

♦️ பி. காளியம்மாள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மகளிர் பாசறை- நாம் தமிழர் கட்சி

♦️ ச.விஜயலட்சுமி
மாநில ஒருங்கிணைப்பாளர்
மகளிர் பாசறை- நாம் தமிழர் கட்சி

♦️ முனைவர் பொன்.கௌசல்யா
பேராசிரியர்

சிறப்புரை:

♦️ நாச்சியாள் சுகந்தி
சமூக செயற்பாட்டாளர்

♦️ செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்-
நாம் தமிழர் கட்சி

#NTK_WomensMeet2022

முந்தைய செய்திஇலங்கையின் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு சிங்கள இனவாத அரசுகளின் கொடுங்கோன்மை ஆட்சியும், இனவெறிச்செயல்பாடுகளுமே காரணம்! – சீமான் கருத்து
அடுத்த செய்திசெஞ்சி சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடுதல்