ஆண்டிபட்டி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

62

மேகமலை வருசநாடு அரசரடி மலைப்பகுதியில் 38 கிராமம் 10 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1924ம் ஆண்டிலிருந்து ஜமீன் கட்டுப்பாடில் இருந்த போதே இந்த நிலப்பரப்பில் குடியேறினார்கள்.

ஆனால் வனவிலங்கு புலிகள் சரணாயலம் அமைக்க போகிறோம் என்ற பெயரில் தனியார் முதலாளிகளை தவிர அப்பாவி பொது மக்களை மட்டும் விவசாய நிலங்களையும் வீடுகளையும் விட்டு வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பி வனத்துறையினர் அச்சுறுத்தி வருகின்றனர்.
இதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக உள்ளது.

வனத்துறையின் விரோதபோக்கை கண்டித்தும் கண்டு கொள்ளாத மாநில அரசை கண்டித்தும் 06.11.2021 அன்று மயிலாடும்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநில இளைஞர் பாசறை செயலாளர் மதிவாணன் கண்டன உரையாற்றினார்

செய்தி வெளியீடு:

தி.பாலமுருகன்
ஆண்டிபட்டி தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் : 8525940167,6383607046

 

முந்தைய செய்திஆண்டிபட்டி தொகுதி அம்பேத்கார் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திகம்பம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்